Arulmigu Thirucourtrallanathaswamy Temple, Courtallam, Tenkasi - 627802, Tenkasi District [TM037857]
×
Temple History
தல பெருமை
இமயமலையில் பார்வதி திருமணம் நிகழ்ந்த நாளில் மூன்று உலகமும் ஒருங்கே கூடி இருந்தமையால் வடபுறம் தாழ்ந்து, தென் புறம் உயர்ந்தும் காணப்பட்டது. அகத்தியமுனிவர் ஒருவரே இருந்தமையால் தேவர் கூட்டத்திற்கு சமமாக அவரை, இறைவன் திரிகூட மலைக்கு அனுப்பினார். அவ்வாறு அகத்தியர் பொதிகை மலை வந்தபோது இத்திருக் கோயில் வைணவ கோயிலாக இருந்தது. மந்திரமும் மருந்துமாகிய திருவெண்ணீரும் உருத்திராட்சமும் தரித்து அகத்திய முனிவர் கோயிலுக்கு செல்ல முயன்றபோது துவார பாலகர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். வைணவர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட அகத்திய மாமுனிவர், இலஞ்சிக் குமரனை சென்று வணங்கினார். வணங்கிய அகத்திய முனிவரிடம் இலஞ்சிக் குமாரர் நினக்கு வேண்டும் வரத்தினை கேட்பாய் என்றார். உடனே...இமயமலையில் பார்வதி திருமணம் நிகழ்ந்த நாளில் மூன்று உலகமும் ஒருங்கே கூடி இருந்தமையால் வடபுறம் தாழ்ந்து, தென் புறம் உயர்ந்தும் காணப்பட்டது. அகத்தியமுனிவர் ஒருவரே இருந்தமையால் தேவர் கூட்டத்திற்கு சமமாக அவரை, இறைவன் திரிகூட மலைக்கு அனுப்பினார். அவ்வாறு அகத்தியர் பொதிகை மலை வந்தபோது இத்திருக் கோயில் வைணவ கோயிலாக இருந்தது. மந்திரமும் மருந்துமாகிய திருவெண்ணீரும் உருத்திராட்சமும் தரித்து அகத்திய முனிவர் கோயிலுக்கு செல்ல முயன்றபோது துவார பாலகர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். வைணவர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட அகத்திய மாமுனிவர், இலஞ்சிக் குமரனை சென்று வணங்கினார். வணங்கிய அகத்திய முனிவரிடம் இலஞ்சிக் குமாரர் நினக்கு வேண்டும் வரத்தினை கேட்பாய் என்றார். உடனே அகத்தியர் குற்றாலத்தில் தனக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை கூறினார். வஞ்சக மறையோரை வஞ்சக வடிவத்தாலே வெல்ல வேண்டும். ஆதலால் நீ வைணவர் போன்று கோயிலுக்குள் சென்று திருமாலை சிவனாக்கி மகுடாகமப்படி வழிபடு என்று குமாரர் கூறி அருளினார். அகத்திய முனிவர் வைணவர் போன்று வேடம் பூண்டு, அருவியில் நீராடி, திருமாலை வணங்குபவர் போன்று கோயிலினுள் நுழைந்துள்ளார்.
வைணவர்கள் அனைவரும் குருவென்று எழுந்து விழுந்து வணங்கினர். அவர் எங்கிருந்து வந்தார் என்ற கேட்டதற்கு திருமலை முளரிக்கண்ணன் திருப்பதி என்னும் பதிலினின்று வருகிறேன் என்று சொல்லி, உள்ளே சென்று, வேதியரை பூசைக்கு வேண்டிய திரவியம் எல்லாம் கொணர்க என்று கூறி, வேதியரை வீதியை விட்டு நீங்கச் செய்து, கொடிமரம் மற்றும் சுற்று தெய்வங்களை வணங்கி விட்டு, திருமாலை வணங்கி விஷ்வரூபம் எடுத்து குறு குறு குற்றாலநாதரே என்று திருமாலின் தலையில் தன் கையை வைத்து குற்றாலநாதராக ஆக்கினார் என்று தல புராணம் கூறுகிறது.