தமிழ்நாடு தென்காசி மாவட்டம் மற்றும் வட்டம் திருக்குற்றாலம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவன குற்றால அருவி, சாரல் இயற்கை வளம். இத்தகைய சிறப்புமிக்க இயற்கை சூழலில் அமைந்துள்ள இத்திருக்கோயில் தென்காசி மாவட்டத்தில், தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் குற்றாலம் கிராமத்தில் பேரருவியின் அடியில் சன்னதி தெருவில் அமைந்துள்ளது. ஆடல் வல்லானின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை இங்கு அமைந்துள்ளது. ஆதி பராசக்தியின் ஞான பீடமாகிய தரணி பீடமும் இங்கு உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க இத்திருக்கோயில் வரலாற்று பெருமையுடையது.